ஆப்நகரம்

எம்.எல்.ஏ.,க்கள் எம்.பி.,க்களிடம் பணம் வசூலித்த திமுக மேலிடம்... எதற்கு?

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மியூசியத்தை திருவாரூரில் அமைக்க திமுக எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி..ம்,களிடம் இருந்து ஒரு மாத சம்பளத்தை மேலிடம் பெற்றுள்ளது.

Samayam Tamil 16 Oct 2019, 11:09 am
தமிழகத்தில் ஒரு எம்.எல்.ஏ.,வின் மாத சம்பளம் ரூ. 1.05 லட்சம். ஒரு எம்.பி.,யின் மாத சம்பளம் ரூ. 2 லட்சம். திமுகவைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் ஒரு மாத சம்பளத்தை கருணாநிதியின் மியூசியம் அமைக்க திமுக கேட்டுப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
Samayam Tamil Karunanidhi Museum


இந்த வகையில் திமுகவுக்கு 20 மக்களவை மற்றும் 5 மாநிலங்களவை உறுப்பினர்கள் உள்ளனர். 100 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தைக் கொடுத்தால் ரூ. 1.55 கோடி வசூலாகும்.

இவர்கள் அனைவரையும் காசோலை அல்லது டிடி-ஆக கொடுக்குமாறு கட்சி மேலிடம் கேட்டுக் கொண்டுள்ளது. இத்துடன் உறுப்பினர்களின் முகவரி மற்றும் பான் கார்டு எண்ணையும் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அம்மாவும் 40 திருடர்களும் - மீண்டும் பற்ற வைத்த சீமான்!

மறைந்த முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் பெயரில் ஒரு டிரஸ்ட் இதற்காக துவங்கப்பட்டுள்ளது. அந்த டிரஸ்ட்டுக்கு இந்தப் பணத்தை அனுப்புமாறு கட்டளை இட்டுள்ளனர். கடந்த அக்டோபர் 14ஆம் தேதி வரை ரூ. 80.56 லட்சம் வசூலிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு அறிவித்த போனஸ்: உங்களுக்கு எவ்வளவுன்னு பார்த்துட்டீங்களா?

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் காட்டூரில் கருணாநிதியின் மியூசியம் அமைக்கப்படும் என்றும் அங்கு கருணாநிதியின் புகைப்படங்கள் வைக்கப்படும் என்றும் சமீபத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். தேசிய மற்றும் மாநிலத் தலைவர்களுடன் கருணாநிதி எடுத்துக் கொண்ட புகைப்படம் மற்றும் போராட்டங்களில் கலந்து கொண்ட புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்படும் என்று தெரிய வந்துள்ளது.

தொழிலாளர்கள் உயிரை பறித்த இடி; புதுக்கோட்டை விவசாய நிலத்தில் நிகழ்ந்த பயங்கரம்!

அடுத்த செய்தி