ஆப்நகரம்

ஸ்டாலின் தலைமையில் 118 ஜோடிகளுக்கு திருமணம்

ஈரோட்டில் நடைபெற்று வரும் தி.மு.க. மண்டல மாநாட்டில் செயல்தலைவா் ஸ்டாலின் தலைமையில் 118 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 26 Mar 2018, 2:18 pm
ஈரோட்டில் நடைபெற்று வரும் தி.மு.க. மண்டல மாநாட்டில் செயல்தலைவா் ஸ்டாலின் தலைமையில் 118 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Stalin Marriage 1


தி.மு.க. சாா்பில் ஈரோட்டில் மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. மாநாட்டின் ஒரு பகுதியாக 118 ஜோடிகளுக்கு கட்சி சாா்பில் இலவச திருமணம் செய்து வைப்பதாக தொிவிக்கப் பட்டது. அதன்படி கட்சியின் செயல் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநாட்டு பந்தலில் 118 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.


தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த தம்பதியருக்கு கட்சி சாா்பில் தாலி, 15 ஆயிரம் ரொக்கம் உள்பட சீா்வாிசை பொருட்கள் வழங்கப்பட்டன. விழாவில் மு.க.ஸ்டாலின் தாலியை எடுத்து கொடுத்து புதுமண தம்பதியரை வாழ்த்தினாா். 118 ஜோடிகளுக்கு ஒரே இடத்தில் திருமணம் நடைபெற்றதால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

அடுத்த செய்தி