ஆப்நகரம்

திமுக சரியாக செயல்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு

எதிர்கட்சியாக திமுக சரியாக செயல்படவில்லை என பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

TNN 17 Aug 2016, 11:51 pm
நெல்லை: எதிர்கட்சியாக திமுக சரியாக செயல்படவில்லை என பாமக இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
Samayam Tamil dmk is not working good as opposite party anbumani ramadoss
திமுக சரியாக செயல்படவில்லை: அன்புமணி குற்றச்சாட்டு


தாமிரபரணி ஆற்று நீரை விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக சிறப்பாக பயன்படுத்துவது குறித்த கருத்தரங்கம் திருநெல்வேலியில் நடைபெற்றது. தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், எதிர்கட்சியாக திமுக சரியாக செயல்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு திட்டம் கடந்த திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு 369 கோடி நிதி ஒதுக்கீடு செய்வோம் என கூறினார்கள். முழுமையாக நிதி ஒதுக்கப்படவில்லை,பின்னர் கிடப்பில் போடப்பட்டது. பின்னர் அதிமுகவும் அதனை கிடப்பில் போட்டு உள்ளது. திட்டம் நிறைவேறினால் கூடுதலாக 50 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறும். திமுக ஒரு திட்டம் கொண்டு வந்தால் அதனை அதிமுகவும், அதிமுக கொண்டு வரும் திட்டத்தை திமுகவும் மாறி மாறி கிடப்பில் போடுகிறார்கள். மக்களை பற்றி அவர்கள் சிந்திப்பது இல்லை. நீர்த் தேக்கங்கள் தூர்வாரப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தாமிரபரணியில் 5 அல்லது 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தடுப்பணைகள் கட்ட வேண்டும் என்று கூறிய அன்புமணி, தாமிரபரணி ஆற்றில் வீட்டுக்கழிவு, வணிக கழிவு நேரடியாக கலக்கிறது. இதனை தடுக்க வில்லையெனில் சென்னை கூவம் போல் மாறி விடும் என்று வேதனை தெரிவித்தார்.

சட்டப்பேரவை கூட்டத்தை மக்கள் நேரலையாக என்று பார்க்கின்றார்களோ அன்று தான் சட்டமன்றம் ஒழுங்காக செயல்படும். திமுக சரியாக செயல்படவில்லை.அதிமுக ஊழல் நிறைந்த கட்சி என்றும் அன்புமணி குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அன்புமணி ராமதாஸ், 3 கண்டெய்னர்களில் 570 கோடி பிடிபட்ட வழக்கில் சிபிஐ விசாரணை உண்மையாக முழுமையாக நடைபெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி