ஆப்நகரம்

தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: கருணாநிதி

''தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை'' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.

TOI Contributor 21 Mar 2016, 1:01 pm
''தேமுதிகவுடன் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களுடன் கூட்டணி அமைப்போம் என்ற நம்பிக்கையை இழக்கவில்லை'' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
Samayam Tamil dmk is speaking with dmdk about alliance dmk leader karunanidhi
தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்கிறது: கருணாநிதி


சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. பின்னர் இந்தக் கூட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டியில், ''தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி அமையும் என்ற நம்பிக்கையை நாங்கள் இழக்கவில்லை.

விரைவில் எங்களது தேர்தல் அறிக்கையை வெளியிடுவோம்' என்று தெரிவித்தார்.

சென்னையில் இன்று கருணாநிதி மாவட்டச் செயலாளர்களை சந்தித்துப் பேசினார். கூட்டத்தில் 65 மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இதில், தேர்தலில் எந்தெந்த தொகுதிகளில் திமுகவிற்கு செல்வாக்கு இருக்கிறது, எந்த தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு இருக்கும், தேர்தல் யுக்திகள் குறித்து பேசப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்த பின்னர், அந்தக் கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கருணாநிதி கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே சமயம் தேமுதிகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்படும் மக்கள் நலக் கூட்டணியும் சமீபத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதற்கு இடையே கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட மாட்டது என்று திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் கூறியிருப்பதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அடுத்த செய்தி