ஆப்நகரம்

உணவுக் குழாய் மாற்றுக்குப் பின்னர் கருணாநிதி வீடு திரும்பினார்!!

திமுக தலைவர் கருணாநிதி செயற்கை உணவுக் குழாய் மாற்றப்பட்டு வீடு திரும்பினார்.

TOI Contributor 16 Aug 2017, 11:18 am
திமுக தலைவர் கருணாநிதி செயற்கை உணவுக் குழாய் மாற்றப்பட்டு வீடு திரும்பினார்.
Samayam Tamil dmk leader karunanidhi returned home after surgery
உணவுக் குழாய் மாற்றுக்குப் பின்னர் கருணாநிதி வீடு திரும்பினார்!!


கடந்த டிசம்பர் 1ம் தேதி உடலில் நீர் சத்து குறைவு, ஊட்டச்சத்து குறைவு காரணமாக சென்னை, காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வார காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

சிகிச்சையில் உடல் நலம் முன்னேற்றம் ஏற்பட்டு டிசம்பர் 7ம் தேதி வீடு திரும்பினார். இதையடுத்து வீடிட்ல் மருத்துவர்கள் தொடர் கண்காணிப்பில் ஓய்வு எடுத்து வந்தார். இருப்பினும் சளித்தொல்லை காரணமாக டிசம்பர் 15ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

கடந்த 7 மாத காலமாக மருத்துவர்கள் கருணாநிதிக்கு வீட்டிலேயே சிகிச்சை அளித்து வரும் நிலையில், இன்று காலை செயற்கை உணவுக் குழாய் மாற்று சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.

இவருக்கு ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த உணவுக் குழாயை மாற்றப்பட்டு வேறு குழாய் பொருத்தப்பட்டது. இந்த சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து வீடு திரும்பினார்.

தொடர்ந்து பழைய உணவுக் குழாய் இருந்தால் தொற்று ஏற்படும் என்பதால் இன்று புதிய குழாய் பொருத்தப்பட்டுள்ளது என்று மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இந்த சிகிச்சைக்குப் பின்னர் கோபாலபுரம் இல்லம் திரும்பினார் கருணாநிதி.

DMK leader karunanidhi returned home after surgery

அடுத்த செய்தி