ஆப்நகரம்

சசிகலா நடராஜன், ராஜாத்தி அம்மாள் அப்பல்லோவில் சந்திப்பா?

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சசிகலாவிடம் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

TOI Contributor 14 Oct 2016, 12:59 pm
அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து சசிகலாவிடம் திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil dmk leader karunanidhis wife rajathi ammal met sasikala natarajan
சசிகலா நடராஜன், ராஜாத்தி அம்மாள் அப்பல்லோவில் சந்திப்பா?


தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு இன்றுடன் 23வது நாளாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேசிய அளவில் இருந்து அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அப்பல்லோ மருத்துவமனை வந்து டாக்டர்கள் குழுவிடம் முதல்வரின் உடல்நலம் குறித்து விசாரித்து செல்கின்றனர். புதன்கிழமை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி இருவரும் வந்து இருந்தனர். நேற்று மாலை, ரிலையன்ஸ் அதிபர் நீடா அம்பானி முதல்வருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் குழுவை சந்தித்துப் பேசினார்.

இதையடுத்து, நேற்று இரவு 9 மணிக்கு மேல் ஜெயலலிதாவின் தோழி சசிகலா நடராஜனை திமுக தலைவர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் சந்தித்துப் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி