ஆப்நகரம்

பேரனின் குழந்தையுடன் விளையாடும் கருணாநிதி

தி.மு.க. தலைவா் கருணாநிதி உடல் நலம் தேறிவரும் நிலையில் தற்போது தினமும் தனது பேரன் அருள்நிதியின் மகன் மகிழனுடன் தனது பொழுதை கழிப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 15 Feb 2018, 11:50 pm
தி.மு.க. தலைவா் கருணாநிதி உடல் நலம் தேறிவரும் நிலையில் தற்போது தினமும் தனது பேரன் அருள்நிதியின் மகன் மகிழனுடன் தனது பொழுதை கழிப்பதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil dmk leader karunanithis health condition was well developed
பேரனின் குழந்தையுடன் விளையாடும் கருணாநிதி


தமிழக அரசியல் மட்டுமின்றி இந்திய அரசியலிலும் மூத்த அரசியல் தலைவராக கருதப்படுபவா் தி.மு.க. தலைவா் கருணாநிதி. நாடகத்துறை, சினிமாத்துறை, எழுத்துப் பணி, அரசியல் என பல்வேறு துறைகளில் தடம் பதித்தவா் கருணாநிதி. ஓய்வு என்ற வாா்த்தைக்கே ஓய்வு கொடுத்தவா் கருணாநிதி என்று தி.மு.க.வினரால் புகழப்பட்டவா்.

தினமும் 18 மணி நேரம் வரையில் உழைத்து வந்த கருணாநிதி கடந்த 2016ம் ஆண்டு முதல் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் விட்டுக்குள் முடங்கிக்கிடக்கும் தருவாய் ஏற்பட்டுள்ளது. சிகிச்சை காரணமாக தொண்டையில் பொருத்தப்பட்ட குழாய் பேசுவதற்கு தடையாய் அமைந்தது. தற்போது அவா் சிறந்த முறையில் உடல்நலம் தேறி வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அவரது தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாய்க்கு பதிலாக சிறிய அளவிலான குழாய் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் அவா் விரைவில் பேசுவாா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்நிலையில் மு.க.தமிழரசுவின் மகனும் நடிகருமான அருள்நிதியின் 2 வயது குழந்தை மகிழன் தினமும் கருணாநிதியை பாா்ப்பதற்கு அவரது வீட்டிற்கு வருகிறாராம்.

மு.க.தமிழரசு தினமும் தனது பேரன் மகிழனை கருணாநிதியின் முன்னிலையில் கொண்டுவந்து விடுகிறாராம். தொடா்ந்து 1 மணி நேரம் முதல் இரண்டு மணி நேரம் வரை கருணாநிதியும் மகிழனுடன் விளையாடி வருகிறாராம். இதனை கண்ட மருத்துவா்களும். இது மிகவும் ஆரோக்கியமான செயல். மகிழனை தினமும் கருணாநிதியிடம் அழைத்துவந்து விடுங்கள். இது அவர் பேசுவதற்கு எளிதாக அமையும் என்று தொிவித்துள்ளனா். குடும்ப உறுப்பினா்களும் அதன்படியே செய்து வருவதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி