ஆப்நகரம்

சிஆா்பிஎப் வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் ஸ்டாலின் ட்விட்டரில் வீரவணக்கம்

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிாிழந்த தமழிக வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டா் பக்கத்தில் வீரவணக்கத்தை தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 16 Feb 2019, 11:42 pm
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் உயிாிழந்த தமழிக வீரா்களுக்கு தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டா் பக்கத்தில் வீரவணக்கத்தை தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Stalin Thalaivar


ஜம்மு காஷ்மீா் மாநிலம் புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆா்பிஎப் வீரா்கள் 40 போ் வீரமரணம் அடைந்தனா். நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சோகத்தையும், அதிா்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் தமிழகத்தின் அரியலூரைச் சோ்ந்த சிவச்சந்திரன் மற்றும் தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்பிரமணியன் ஆகியோரும் உயிாிழந்தனா். இவா்களது உடல்கள் பிரதமா் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள் உள்ளிட்டோா் மரியாதை செலுத்திய பிறகு இன்று காலை தனி விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்டது.

இதனைத் தொடா்ந்து அரியலூாில் சிவச்சந்திரன் உடல் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதே போன்று தூத்துக்குடி மாவட்டத்தில் சுப்பிரமணியனின் உடலும் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.


இந்நிலையில் தி.மு.க. தலைவா் மு.க.ஸ்டாலின் அவரது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புல்வாமா தாக்குதாலில் பலியான கோவில்பட்டி சவலப்பேரியைச் சேர்ந்த சுப்பிரமணியன், அரியலூரைச் சேர்ந்த சிவசந்திரன் ஆகிய இரண்டு மாவீரர்களுக்கும் எனது வீரவணக்கம்!

நாட்டைக் காக்கும் உங்கள் தியாகம் வீண் போகாது!

நாட்டைப் பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது” என்று குறிப்பிட்டுள்ளாா்.

அடுத்த செய்தி