ஆப்நகரம்

திருப்பூரில் அரங்கேறிய அலட்சிய மரணங்கள்: ஸ்டாலின் குற்றச்சாட்டு!

திருப்பூரில் மின் தடை காரணமாக இருவர் உயிரிழந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Sep 2020, 7:14 am
திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின் தடை காரணமாக ஆக்ஜிசன் செலுத்துவதில் சிக்கல் ஏற்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்தனர்.
Samayam Tamil mk stalin


கொரோனாவால் நாள்தோறும் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மின் தடை காரணமாக இருவர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பு பணிகளுக்காக பெரும் தொகை ஒதுக்கப்பட்டுள்ள போதும், மாவட்டங்கள் வாரியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக மின் தடை ஏற்பட்டதால் நோயாளிகள் அவதியுற்றதாக கூறும் அரசு மருத்துவமனை முதல்வர் வள்ளி, மின் தடையால் அவர்கள் இறக்கவில்லை வேறு உடல் பாதிப்பால் இறந்ததாகவும் கூறியுள்ளார்.

திருப்பூர் கொடுமை: தண்ணி இல்ல, ஆக்சிஜன் இல்ல, நல்லா இருந்த மனுஷன் போயிட்டாரு!

இந்நிலையில் இந்த மரணம் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“திருப்பூர் அரசு மருத்துவமனை ஐசியூவில் ஆக்சிஜன் தடைப்பட்டு இருவர் உயிரிழந்திருக்கிறார்கள்.

மருத்துவமனையை நம்பியவர்களின் கொடூர மரணங்கள் இவை! எடப்பாடி பழனிசாமி ஆட்சியின் இலட்சணம் இது!

கொரோனா மரணங்கள் தவிர அரசின் அலட்சிய மரணங்களும் அதிகரித்து, மக்களைக் கொல்லும் அரசாக மாறிவிட்டது” என்று ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அடுத்த செய்தி