ஆப்நகரம்

சுதந்திர தினம்: கொடியேற்ற மரபை மாற்றிய ஸ்டாலின்!!

சுதந்திர தினத்தையொட்டி, சென்னை அறிவலாயத்தில் வழக்கத்துக்கு மாறாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றியுள்ளது அரசியல் அரங்கில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 15 Aug 2020, 8:00 pm
திமுகவின் தலைமை அலுவலகமான, சென்னை அண்ணா அறிவாலயத்தில் சுதந்திரதினத்தையொட்டி, ஆண்டுதோறும் தேசியக் கொடி ஏற்றப்படுவது வழக்கம்.
Samayam Tamil mks flag host


இந்த வழக்கத்தின்படியே இன்றும் அறிவாலய வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது. ஆனால், இந்த முறை வழக்கத்துக்கு மாறாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

திமுகவின் அமைப்புச் செயலாளர்களாக உள்ளவர்களே தேசியக் கொடியை ஏற்றுவது வழக்கம். இந்த மரபின்படி இன்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தேசியக்கொடியை ஏற்றுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு மாறாக, கடைசி நிமிடத்தில் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.

சுதந்திர தின கொண்டாட்டம்: தேசிய கொடி ஏற்றி முதல்வர் உரை!

அண்ணாதுரை, கருணாநிதி காலத்தில் இருந்தே திமுகவின் தலைவர்கள் யாரும் அண்ணா அறிவாலயத்தில் தேசியக் கொடியை ஏற்றியதில்லை. இந்த நிலையில், கட்சியின் இந்த மரபுக்கு மாறாக ஸ்டாலின் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை ஏற்றியுள்ளது அரசியல் அரங்கில் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி, முதன்மை செயலர் கே.என்.நேரு, டி.ஆர்.பாலு எம்.பி. உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அடுத்த செய்தி