ஆப்நகரம்

MK Stalin: மு.க. ஸ்டாலின் பயத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார்: அமைச்சர் ஜெயக்குமார்!

திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது பயத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 23 Feb 2019, 12:42 pm
திமுக தலைவர் முக ஸ்டாலின் தற்போது பயத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil MK.


மக்களவைத் தோ்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன. திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தொகுதி பங்கீடு இறுதிச் செய்யப்படவில்லை. அதற்குள் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணியில் பாமக 7 மக்களவை மற்றும் ஒரு மாநிலங்களவை தொகுதி, பாஜக 5 மக்களவை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டன. தொடர்ந்து தேமுதிக – அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில், திமுக - காங்கிரஸ் கூட்டணி ஒப்பந்தம் கைழுத்தானது. இந்த கூட்டணியைத் தொடர்ந்து திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணிக்காக தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து வருகின்றனர். ஆனால், அது உடல் நலம் குறித்த சந்திப்பு என்று கட்சி தரப்பில் கூறப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ப்பதில் எந்த இழுபறியும் இல்லை. முடியும் நேரத்தில் கண்டிப்பாக முடியும். எங்களது கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி, சக்தி வாய்ந்த கூட்டணி. அதிமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்ற ஸ்டாலினின் எண்ணம் ஒருபோதும் பலிக்காது. மற்ற கட்சிகள் அதிமுகவில் இணையக் கூடாது என்றே அவர் கருதுகிறார். தற்போது பயத்தின் உச்சகட்டத்தில் தான் ஸ்டாலின் இருக்கிறார் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி