ஆப்நகரம்

மு.க.ஸ்டாலின் வீட்டில் ஜெ.அன்பழகன் திருவுருவப் படம் திறப்பு!

மறைந்த திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகனின் திருவுருவப் படத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

Samayam Tamil 4 Jul 2020, 11:47 am
ஜெ.அன்பழகன் ஜுன் 2ஆம் தேதி மூச்சுத் திணறல் காரணமாக குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த போதிலும் ஜுன் 10ஆம் தேதி காலை 8.05 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. அன்று ஜெ.அன்பழகனின் பிறந்தநாளும் கூட.
Samayam Tamil mk stalin opened j anbazhagan photo


திமுகவின் மாவட்டச் செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான ஜெ.அன்பழகன் கலைஞர் குடும்பத்துக்கு மிக நெருக்கமானவராக இருந்துள்ளார். ஜெ.அன்பழகனின் தந்தை பழக்கடை ஜெயராமன் திமுகவில் மிகுந்த செல்வாக்குடன் திகழ்ந்தவர். 1976ஆம் ஆண்டு மிசா சட்டத்தில் மு.க.ஸ்டாலின், முரசொலி மாறன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டபோது ஜெயராமனும் உடன் இருந்தார். அப்போதிருந்தே கலைஞருடனும் ஸ்டாலினுடனும் அன்பழகன் நட்பு பாராட்டி வந்தார்.

2011, 2016ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் திருவல்லிக்கேனி, சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 15 ஆண்டுகளாக திமுகவில் மாவட்டச் செயலாளராக பணியாற்றியவர் ஜெ.அன்பழகன். இந்நிலையில் அன்பழகன் கொரோனா நிவாரணப் பணிகளை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

இருபதாயிரம் ரூபாய்க்கு இரட்டை கொலையா? காவல் நிலையத்தில் நடந்த பேரம்!

கொரோனா வைரஸ் தாக்கப்பட்டு உயிரிழந்தவர்களை சுகாதாரத் துறை வழிகாட்டுதலின்படியே அடக்கம் செய்ய வேண்டும். கூட்டம் அதிகமாக கூடக்கூடாது என்பதால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அன்றைய தினம் கண்ணம்மாபேட்டை சுடுகாட்டுக்குச் செல்லவில்லை. அந்த சமயம் அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகனின் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்நிலையில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய ஆழ்வார்பேட்டை வீட்டில் அன்பழகனின் திருவுருவப் படத்தை திறந்துவைத்தார். இந்த நிகழ்வில் திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, ஸ்டாலின் மனைவி துர்கா மற்றும் ஜெ.அன்பழகனின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி