ஆப்நகரம்

”ஷாக் அடிக்கும் மின் கட்டணம்” - சரமாரியாக விளாசிய ஸ்டாலின்; வீடியோவை பாருங்க!

தமிழகத்தில் மின் கட்டண அதிகரிப்பு தொடர்பாக ஆளுங்கட்சி மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

Samayam Tamil 19 Jul 2020, 1:47 pm
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா வைரஸ் வந்தால் எந்தளவிற்கு மக்கள் அதிர்ச்சி அடைவார்களோ அதை விட அதிகமாக மின் கட்டணத்தை பார்த்து ஒவ்வொரு வீட்டினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மின் கட்டணத்தை பார்த்தால் அது நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது. நாடு இருக்கும் நிலை உங்கள் அனைவருக்கும் நல்லா தெரியும். ஆனால் முதலமைச்சர்களுக்கும், அமைச்சர்களுக்கும் தான் தெரியவில்லை. கொரோனா வைரஸ் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வரும் சூழலில் ஊரடங்கை தளர்த்தினார்கள். மதுக்கடைகள் திறந்தார்கள். 10ஆம் வகுப்பு தேர்வை நடத்துவேன் என்றார்கள்.

இதற்கு மத்தியில் ஏதாவது நன்மை செய்தார்களா என்றால் இல்லை. மார்ச் மாதத்தில் இருந்து மக்கள் தொடர்ந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். இவர்களுக்கு ரூ.5,000 நிவாரணமாக கொடுங்கள் என்று கடந்த மூன்று மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

பிளாஸ்மா தானம் செய்தால் அரசு பணியில் முன்னுரிமை - செவிசாய்க்குமா தமிழக அரசு?

ஆனால் முதலமைச்சர் கேட்கவும் இல்லை. செய்யவும் இல்லை. அதேசமயம் வசூல் பண்ணுவதில் மட்டும் கவனம் செலுத்துகிறார். அரசின் அலட்சியத்தால் பல்வேறு மாவட்டங்களில் வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. மின் கட்டண ரீடிங் எடுத்ததில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன.

இதுகுறித்து அரசிடம் விளக்கம் கேட்டால், நீங்கள் அனைவரும் வீட்டில் இருந்தீர்கள். அதனால் ஏற்பட்ட கட்டண உயர்வு என்று விளக்கம் அளிக்கிறார்கள். மக்கள் வீட்டில் இருந்ததற்கு அரசு போடும் அபராதத் தொகையா இது? கொரோனா விஷயத்தில் முதல் நாளில் இருந்தே அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை.

அதேசமயம் மக்கள் மீது பழியைப் போடுகிறார்கள். மின் கட்டண இவ்வளவு அதிகரித்திருப்பது மக்களுக்கு எவ்வளவு பளு என்று அவர்களைக் கேட்டால் தான் தெரியும். அதுவும் தற்போது நெருக்கடியான சூழலில் இப்படிச் செய்யலாமா? நுகர்வோருக்கு நியாயமான மின் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என்று மின்சார சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாத்தான்குளம் சம்பவம் : கோவில்பட்டி சிறையில் சிபிஐ விசாரணை!

ஆனால் தற்போது அதிமுக அரசு விதித்துள்ள கட்டணம் அநியாய கட்டணம். மற்ற மாநிலங்களில் ஏராளமான சலுகைகள் வாரி வழங்கப்படுகின்றன. தமிழகத்தின் நிதி நிலைமை என்னவாயிற்று? விளக்கம் கொடுங்கள். இந்த விஷயத்தைக் கண்டித்து வரும் 21ஆம் தேதி கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடத்தவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி