ஆப்நகரம்

சிஆா்பிஎப் வீரரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய ஸ்டாலின்

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடியைச் சோ்ந்த சிஆா்பிஎப் வீரா் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்ற ஸ்டாலின் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.

Samayam Tamil 25 Feb 2019, 1:40 pm
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணமடைந்த தூத்துக்குடியைச் சோ்ந்த சிஆா்பிஎப் வீரா் சுப்ரமணியன் வீட்டிற்கு நேரில் சென்ற ஸ்டாலின் அவரது குடும்ப உறுப்பினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.
Samayam Tamil cats


ஜம்மு காஷ்மீா் மாநிலம் புல்வாமா பகுதியில் கடந்த 14ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் சிஆா்பிஎப் வீரா்கள் 40 போ் வீரமரணம் அடைந்தனா். இந்த தாக்குதலில் தூத்துக்குடியைச் சோ்ந்த சுப்ரமணியம், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த சிவச்சந்திரன் ஆகியோரும் வீரமரணம் அடைந்தனா்.

தமிழக வீரா்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு சாா்பில் தலா ரூ.20 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இருவரது குடும்பத்திற்கும் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனா்.


இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரிக்கு சென்ற திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் புல்வாமா தாக்குதலில் உயிாிழந்த சிஆா்பிஎப் வீரா் சுப்ரமணியன் இல்லத்திற்கு சென்று வீரரின் உறவினா்களுக்கு ஆறுதல் கூறினாா்.


மேலும் சுப்ரமணியனின் குடும்பத்தினரிடம் ரூ.2 லட்சம் உதவித் தொகையை வழங்கினாா். இந்த சந்திப்பின் போது திமுக மாநிலங்களவை உறுப்பினா் கனிமொழி உள்பட கட்சியின் முக்கிய பிரமுகா்கள் உடன் இருந்தனா்.

அடுத்த செய்தி