ஆப்நகரம்

கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது

கூட்டணிக் கட்சிகளுடனான திமுக-வின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

TNN 14 Mar 2017, 6:35 pm
சென்னை: கூட்டணிக் கட்சிகளுடனான திமுக-வின் ஆலோசனை கூட்டம், அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
Samayam Tamil dmk meeting with alliance parties in anna arivalayam
கூட்டணி கட்சிகளுடன் திமுக ஆலோசனை கூட்டம் தொடங்கியது


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் தொடர்பான, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் தலைவர் திருநாவுக்கரசர், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட 10 அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில் ஆர்கே நகரில் இடைத்தேர்தல், களமிறங்கவுள்ள வேட்பாளர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஆர்கேநகரில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனு விநியோகம் அண்மையில் நடைபெற்றது. அதன்பேரில், விருப்ப மனு அளித்தவர்களிடம் அக்கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில் நேர்காணல் நடைபெற்றது.

ஆர்கேநகரில் திமுக சார்பில் சென்ற முறை களமிறங்கிய சிம்லா முதுச்சோழன் உள்பட சுமார் 20 பேரிடம் நேர்காணல் நடத்தப்பட்ட இந்த நேர்காணல், நேற்றுடன் முடிவடைந்தது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக் செயல் தலைவர் ஸ்டாலின், ஆர்கே நகர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது குறித்து நாளை (இன்று) அறிவிக்கப்படும் என்றார்.

இத்தகைய சூழலில், கூட்டணிக் கட்சிகளுடனான திமுக-வின் ஆலோசனை கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. இக் கூட்டம் முடிந்த பிறகு, ஆர்கேநகரில் திமுக சார்பில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்படும் என தெரிகிறது.
DMK meeting with alliance parties in Anna Arivalayam

அடுத்த செய்தி