ஆப்நகரம்

கொரோனா: திமுக எம்எல்ஏ சீரியஸ், பெயரை வெளியிட்ட மருத்துவமனை!

கொரோனாத் தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த தகவல் வெளியிடக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ள சூழலில்...

Samayam Tamil 4 Jun 2020, 7:40 pm
கொரோனா காரணமாக திமுக சட்டசபை உறுப்பினர் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி நேற்று வெளியாகியிருந்தது. இந்த சூழலில் சம்பந்தப்பட்ட நபரின் பெயரை வெளியிட்ட தனியார் மருத்துவமனை, அவர் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
Samayam Tamil கொரோனாவால் திமுக எம்எல்ஏ சீரியஸ், பெயரை வெளியிட்ட மருத்துவமனை!
கொரோனாவால் திமுக எம்எல்ஏ சீரியஸ், பெயரை வெளியிட்ட மருத்துவமனை!


நாட்டில் கொரோனாத் தொற்று பரவத் தொடங்கியபோது மத்திய அரசு உத்தரவு ஒன்றைப் பிறபித்தது. அந்த உத்தரவில், “கொரோனா பாதிப்பிற்கு ஆளான நபர்களின் அடையாளம் உள்ளிட்டவற்றை வெளியிடக் கூடாது” என உத்தரவிட்டிருந்தது.

இதன் காரணமாக அனைத்து மாநில அரசுகளும் கொரோனா பாதிப்பிற்கு ஆளான நபர்களின் வயது விவரங்களை மட்டுமே வெளியிட்டு வந்தது. மேலும், பாதிப்பிற்கு ஆளான நபர்களின் இருப்பிடங்கள் குறித்த தகவலையும் வெளியிட்டது.

பாதிக்கவைப்பிற்கு ஆளான நபர்களின் பகுதியில் வசிப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, முகவரி உள்ளிட்டவற்றை வெளியிடுவதாக அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன.

தமிழகத்தில் கொரோனா: சென்னை கொடுத்துவரும் அதிர்ச்சி... 12 பேர் பலி...

இந்த சூழலில் திமுக சட்ட சபை உறுப்பினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான ஊடகங்கள் தொடங்கி இப்போது அவருக்குச் சிகிச்சை அளித்து வரும் ரீலா என்ற தனியார் மருத்துவமனையும் அவர் பெயரைக் குறிப்பிட்டுள்ளது.


வைரஸ் தொற்றுக்கு ஆளான அந்த திமுக சட்ட சபை உறுப்பினருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து பத்திரிகை செய்தியில் கூறியிருப்பதாவது:
கொரோனா காரணமாகச் சிகிச்சை பெற்று வரும் திமுக சட்டசபை உறுப்பினர் 80 சதவீதம் சுவாசம் செயற்கையாகவே வழங்கப்படுகிறது.

கடந்த 24 மணி நேரம் அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி