ஆப்நகரம்

திமுகவை உலுக்கிய எம்.எல்.ஏ மரணம்; அதிர்ச்சியில் மு.க.ஸ்டாலின்!

திமுக சட்டமன்ற உறுப்பினராக இருந்த கே.பி.பி சாமி உடல்நலக்குறைவால் காலமானார்.

Samayam Tamil 27 Feb 2020, 7:48 am
சென்னையில் கடந்த 1962ஆம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி பிறந்தவர் கே.பி.பி.சாமி. இவர் திமுகவில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்தார். அக்கட்சியில் மீனவர் அணியின் மாநில செயலாளராக இருந்துள்ளார்.
Samayam Tamil KPP Samy


57 வயதான இவர், கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். தற்போது திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவாக இருந்து வந்துள்ளார்.

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த கே.பி.பி.சாமி, கே.வி.குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இதையடுத்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சியினர் சென்றுள்ளனர்.

ஜெ.மர்ம மரணம்: ஈபிஎஸ் – ஓபிஎஸ் தப்பவே முடியாது..! பகீர் எச்சரிக்கை விடும் ஸ்டாலின்!

கடந்த 2005ஆம் ஆண்டு கே.வி.குப்பத்தை சேர்ந்த செல்லத்துரை என்பவர் மாயமான வழக்கில், கே.பி.பி.சாமி மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டு 6 மாதத்திற்கும் மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

அப்போது மனைவி உமா மாரடைப்பால் காலமானார். 2015ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலின் போது, அவரது மகன் இனியவன் வீட்டில் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்.எல்.ஏவாக இருக்கும் கே.பி.பி.சாமி மரணத்தின் மூலம் தமிழக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 99ஆக குறைந்துள்ளது. கே.பி.பி.சாமி மரணத்திற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அடுத்த செய்தி