ஆப்நகரம்

இப்படி பண்ணா ‘அடிமை, டயர் நக்கி’னு தான் சொல்வாங்க - கொந்தளித்த திமுக எம்.எல்.ஏ!

வைகை ஆற்று பாலத்தில் நடைபெற்ற விஷயம் குறித்து, திமுக எம்.எல்.ஏ தியாகராஜன் கொந்தளிப்புடன் டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 24 Jun 2019, 7:44 pm
தமிழகம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள நீர் நிலைகள், அணைப் பகுதிகள் உள்ளிட்டவை வறண்ட நிலையில் காணப்படுகின்றன.
Samayam Tamil Vaigai Dam


பருவமழை பொய்த்தது முக்கிய காரணமாக சொல்லப்பட்டாலும், நீர் நிலைகளை தூர்வாராதது தான் அடிப்படை காரணமாக விளங்குகிறது. ஆரவாரம் இன்றி மண் மேடுகளுடன் காணப்படும் அணைகளில் ஒன்றாக மதுரையின் வைகை ஆற்றுப் பாலம் இருக்கிறது.

சங்கம் வைத்து வளர்க்கப்பட்ட மதுரையில் வைகை ஆறு பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கியது. இவ்வளவு சிறப்புகளை பெற்றிருந்தாலும், வைகை ஆற்று பாலம் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது பாலத்திற்கு சமீபத்தில் காவி நிறம் பூசப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்த திமுக எம்.எல்.ஏ பி.தியாகராஜன், பாரம்பரியமிக்க மதுரை ஏ.வி மேம்பாலத்திற்கு இந்த வண்ணத்தை அடிப்பது எப்படி சரியாகும்? இங்கு யார் ஆட்சி நடக்கிறது?

அண்ணா, திராவிடம் என்று கட்சிக்கு பெயர் வைத்துக்கொண்டு கொஞ்சமும் சுயமரியாதையற்ற வகையில் செயல்பட்டால் மக்கள் இவர்களை 'அடிமை, டயர்நக்கி' என்றெல்லாம் அழைக்காமல் இருப்பார்களா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதில் அந்த அணையின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் ஒரு சாமியாராக இருந்து, அரசியலில் களமிறங்கியவர்.

தனது ஆட்சியில் அரசு கட்டடங்களுக்கு காவி நிறம் பூசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் தமிழகத்திலோ பாஜக ஆட்சி நடைபெறாமலே, காவி பூசப்பட்டு வருகிறது.

அதாவது பாஜகவின் கைப்பாவையாக அதிமுக இருக்கிறது என்று கூறுவதெல்லாம் உண்மை தானா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்புகின்றனர்.

அடுத்த செய்தி