ஆப்நகரம்

சோகத்தில் மூழ்கிய திமுக- எம்பிக்கள் கூட்டம்லாம் இப்போ கிடையாது!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 2பேர் கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள நிலையில், அக்கட்சி சோக கடலில் மூழ்கியுள்ளது.

Samayam Tamil 28 Feb 2020, 11:48 am
தமிழ்நாட்டில் கடந்த 2 நாட்களில் காலை நேரத்தில் திமுக குறித்து வந்த முதல் செய்தி திமுக சட்டமன்ற உறுப்பினர் மரணம் என்பதே. 2 நாட்களில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளனர். இருவருமே உடல் நலத்தில் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்த உயிரிழப்புகளால் சட்டமன்றத்தில் திமுகவின் பலம் 98ஆகக் குறைந்துள்ளது.
Samayam Tamil a16bb2292366e3e88d0cd2e2c0bf6de6f906c162-tc-img-preview


உயிரிழந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களில் குடியாத்தம் தொகுதியில் கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காத்தவராயனும் ஒருவர். இவர் சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று ஓராண்டுகூட முடியவில்லை.

காத்தவராயன் சமீப நாட்களாக உடல் நலம் குன்றிபோல்தான் காணப்பட்டுள்ளார். காத்தவராயன் உடல்நிலை குறித்து அறிய திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று குடும்பத்தாரிடம் விசாரித்துவிட்டு வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

2 நாட்களில் 2 திமுக எம்.எல்.ஏக்கள் மரணம்; காலமானார் குடியாத்தம் எம்.எல்.ஏ!

அதேபோல் நேற்று முன்தினம் திருவொற்றியூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் கே. பி. பி. சாமி உயிரிழந்தார். முன்னாள் அமைச்சரான சாமி, திமுகவில் பெரும் செல்வாக்கு பெற்றவர். 2 நாளில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழந்துள்ளது திமுகவினரைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதே வேளையில் திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் உடல் நலம் குன்றி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே, அன்பழகன் மக்களவை, மாநிலங்களவை எம்பிக்கள் கூட்டம் பிப்ரவரி 29ஆம் தேதி நடக்கும் என எம்பிக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் உயிரிழப்பு எனக் கட்சியே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், எம்பிக்கள் கூட்டம் கூட்டினால் அதில் எதையும் விவாதிக்க முடியாது. அது முறையும் அல்ல என திமுக எம்பிக்கள் கூட்டத்தை ரத்து செய்துள்ளது.

அடுத்த செய்தி