ஆப்நகரம்

நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க ஆளுநரிடம் திமுக எம்பிக்கள் கோரிக்கை

தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என தமிழக ஆளுநரை நேரில் சந்தித்த திமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

TNN 19 Feb 2017, 12:33 pm
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் நேற்றைய தினம் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க வேண்டும் என தமிழக ஆளுநரை நேரில் சந்தித்த திமுக எம்பிக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Samayam Tamil dmk mps urges governor to announce floor test is invalid
நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்க ஆளுநரிடம் திமுக எம்பிக்கள் கோரிக்கை


பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இன்று காலை சட்டப்பேரவை கூடியது முதலே, ரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி வந்த திமுக-வினர், தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், இரண்டு முறை பேரவை ஒத்தி வைக்கப்பட்டது. அதேபோல், அமளியில் ஈடுபட்ட திமுக-வினரை அவையில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் தனபால் உத்தரவிட்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏ-க்கள் பேரவைக்குள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, சபாநாயகர் உத்தரவின் பேரில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக எம்எல்ஏ-க்களை அவைக் காவலர்கள் குண்டுக் கட்டாக அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது நடைபெற்ற அமளியில், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டது. மேலும், தாங்கள் தாக்கப்பட்டதாகவும் திமுக-வினர் குற்றம் சாட்டினர்.

இது குறித்து ஆளுநரிடம் புகார் அளித்த ஸ்டாலின், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி சிலை முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் மற்றும் திமுக மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டு பின், விடுதலை செய்யப்பட்டனர்.

இந்நிலையில், திருச்சி சிவா, டிகேஸ் இளங்கோவன், ஆர்எஸ் பாரதி உள்ளிட்ட திமுக எம்பிக்கள் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருச்சி சிவா, எதிர்க்கட்சி இல்லாமல் ஒரு தலைபட்சமாக வாக்கெடுப்பு நடந்துள்ளது. எதிர்க்கட்சி இல்லாமல் வாக்கெடுப்பு நடைபெற்றது சட்டத்துக்கு முரணானது. எனவே, நம்பிக்கை வாக்கெடுப்பை செல்லாது என அறிவிக்க ஆளுநரை கோரியுள்ளோம். இது தொடர்பான கோரிக்கை மனுவையும் அளித்துள்ளோம் என்றார்.
DMK MP's urges governor to announce floor test is invalid

அடுத்த செய்தி