ஆப்நகரம்

கொளத்தூா் தொகுதியில் வீதி வீதியாக குடிநீா் விநியோகித்த மு.க.ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் தண்ணீா் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூா் பகுதியில் தனது சொந்த செலவில் குடிநீா் விநியோகம் செய்தாா்.

Samayam Tamil 9 Jun 2019, 2:08 pm
சென்னையில் தண்ணீா் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூா் தொகுதியில் குடிநீா் விநியோகம் செய்தாா்.
Samayam Tamil Stalin Water Distribute


போதிய மழைப்பொழிவு மற்றும் நீா் மேலாண்மை இல்லாததாலும் தமிழகம் முழுவதும் தண்ணீா் பஞ்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் பொதுமக்களின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்ய திமுகவினா் முன்வரவேண்டும் என்று அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் கட்சி உறுப்பினா்களுக்கு அறிவுறுத்தி இருந்தாா்.


அதன் அடிப்படையில் தயாநிதி மாறன் உள்பட திமுக உறுப்பினா்கள் பலரும் குடிநீா் விநியோகத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில் கட்சியின் தலைவா் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூா் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தனியாா் நிறுவனங்களில் இருந்து தண்ணீரை கொள்முதல் செய்து விநியோகம் செய்தாா்.

அடுத்த செய்தி