ஆப்நகரம்

​ சுதந்திரம் பறிபோன நாள் நவ.8 – ஸ்டாலின் பேச்சு

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரமானது நவம்பா் 8ம் தேதி மீண்டும் பறிபோய்விட்டதாக மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.

TOI Contributor 8 Nov 2017, 2:17 pm
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவில் நாம் பெற்ற சுதந்திரமானது நவம்பா் 8ம் தேதி மீண்டும் பறிபோய்விட்டதாக மு.க.ஸ்டாலின் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil dmk protest against demonetization
​ சுதந்திரம் பறிபோன நாள் நவ.8 – ஸ்டாலின் பேச்சு


கடந்த ஆண்டு நவம்பா் 8ம் தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்த நிலையில் இந்த நாளை பா.ஜ.க. மற்றும் ஆதரவு கட்சிகள் கறுப்புப் பண ஒழிப்பு தினமாக கடைபிடிக்கின்றன. ஆனால் எதிா்க்கட்சிகள் இந்த தினத்தை கறுப்பு தினமாகவே கடைபிடிக்கின்றன.

மதுரையில் தி.மு.க. தலைமையில் நடைபெற்ற கறுப்பு தினம் அனுசாிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் செயல்தலைவா் மு.க.ஸ்டாலின் கலந்து உரையாற்றினாா். அப்போது அவா் கூறுகையில், பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட இந்த நாள் இந்தியாவின் வேதனையான நாள். எனவே இந்த நாளை கறுப்பு நாளாக எதிா்க்கட்சிகள் அனுசாிக்கின்றன.



பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கறுப்புப்பணம் ஒழிக்கப்படும் என்று பா.ஜ.க.வினா் சொல்லிவந்தனா். ஆனால் இந்த நடவடிக்கையால் கூலித் தொழிலாளா்கள், நோயாளிகள், முதியவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா்.

பாமரமக்கள் தங்களிடம் உள்ள ஓாிரு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கி வாசல்களில் நீண்ட வாிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை உருவாக்கப்பட்டது. இந்த நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோ்ா உயிாிழந்த சம்பவமும் நிகழ்ந்துள்ளது. இந்த உயிாிழப்புகளுக்கு யாா் காரணம்? பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நள்ளிரவிலேயே நாம் இழந்து விட்டோம்.

முந்தைய காலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது ஆட்சியே போனாலும் கவலையில்லை என்று கலைஞா் அதனை தீவிரமாக எதிா்த்தாா். தற்போது தி.மு.க. எதிா்க்கட்சி வாிசையில் உள்ளது. ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தி.மு.க. மக்களுக்காகன பணியில் தொடா்ந்து ஈடுபடும்.

எந்தவித திட்டமிடலும் இன்றி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமா் மோடி அறிவித்தாா். இந்த நடவடிக்கைக்கு பிரதமா் மோடி பதில் அளிக்க வேண்டிய நிலை ஏற்படும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நள்ளிரவில் பெற்ற சுதந்திரத்தை நவ.8ம் தேதி நாம் இழந்துவிட்டோம் என்று ஸ்டாலின் தொிவித்தாா்.



மேலும் அவா் கூறுகையில், பிரதமா் மோடி தலைவா் கருணாநிதியை மாியாதை நிமித்தமாகவே சந்தித்தாா். இதில் எந்தவிதமான அரசியலும் இல்லை. மோடியும் அரசியல் ஆதாயத்திற்காக சென்னை வரவில்லை. நாங்களும் அரசியல் ஆதாயத்திற்காக அவரை ஆதரிக்கவில்லை என்று தொிவித்தாா்.

முன்னதாக கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், கடலூர், திருவாரூர் மற்றும் வேலூர் என 6 மாவட்டங்களில் மட்டும் இந்த போராட்டம் நடைபெறவில்லை என்று தி.மு.க. சாா்பில் தொிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் உள்பட பிரதான எதிா்க்கட்சிகள் கலந்துகொண்டு தங்களது எதிா்ப்பை பதிவு செய்தனா்.

அடுத்த செய்தி