ஆப்நகரம்

அனைத்து கட்சி கூட்டம்: கமலை புறக்கணிக்கும் திமுக

காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

Samayam Tamil 31 Mar 2018, 4:12 pm
காவிரி விவகாரம் தொடர்பாக திமுகவின் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
Samayam Tamil maxresdefault


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த ஆறு வாரக்கெடு முடிந்த பிறகும் மத்திய அரசு அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அடுத்தக்கட்டமாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுப்பது குறித்து ஆலோசிக்க திமுக சார்பில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

திமுகவுடன் தொடர்ந்து நெருக்கமாகப் பழகிவந்தவர் கமல். திமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் பவளவிழாவில் கமல் பங்கேற்று மேடையில் உரையாற்றவும் செய்தார்.

பின்னர், காவிரி விவகாரம் தொடர்பாக பிப்ரவரி 22ஆம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு கமல்ஹாசனுக்கு அழைப்பு கொடுக்கவில்லை. அதற்கு முந்தைய தினம்தான் கமல் தனது மக்கள் நீதி மய்யம் கட்சியையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இருப்பினும் அவர் அழைக்கப்படவில்லை. தொடர்ந்து நாளை திமுக அறிவித்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் கமலுக்கு அழைப்பு இல்லை.

அடுத்த செய்தி