ஆப்நகரம்

கவர்னருடன் திமுக, தோழமை கட்சி தலைவர்கள் சந்திப்பு!

காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு, தோழமை கட்சிகளுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார்.

Samayam Tamil 13 Apr 2018, 12:48 pm
காவிரி விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப் பிறகு, தோழமை கட்சிகளுடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின், கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை ஸ்டாலின் சந்தித்தார்.
Samayam Tamil banwarilal_stalin (1)


காவிரி மேலாண்மை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக சார்பில், அனைத்துக்கட்சி தலைவர்களின் ஆதரவோடு ரயில் மறியல், சாலை மறியல், உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இதனையடுத்து கடந்த 7ம் தேதி முதல் திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமைகள் மீட்பு நடைபயணத்தை திமுக செயல்தலைவர் ஸ்டாலின் தோழமை கட்சிகளுடன் தொடங்கினார்.

இந்த பயணமானது திருச்சியிலிருந்து கடலூரில் முடிவடைந்ததையடுத்து, அங்கிருந்து வாகன பேரணியாக சென்னை கவர்னர் மாளிகை வந்து கவர்னரிடம் மனு கொடுப்பதாக முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், வாகன பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இதனால், நேற்று இரவே ஸ்டாலின் சென்னை திரும்பினார்.

இந்நிலையில், காவிரி விவகாரத்தில் அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். இந்த கூட்டத்தில் திக தலைவர் வீரமணி, மார்க்சிஸ்ட் மாநிலச் செலயாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்த பிறகு, தோழமை கட்சிகளுடன் ஆலோசனை நடத்திய ஸ்டாலின், கவர்னரை சந்தித்து மனு கொடுக்க சென்றார்.

அடுத்த செய்தி