ஆப்நகரம்

ஆப்ரேஷன் ‘சக்சஸ்’ பேசண்ட் ‘டைஸ்’ : போட்டுத்தாக்கிய ஸ்டாலின்!

கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் திட்டத்தை ஆப்ரேஷன் ‘சக்சஸ்’ பேசண்ட ‘டைஸ்’ என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

TOI Contributor 15 Nov 2016, 5:24 pm
மதுரை: கருப்பு பணத்தை ஒழிக்கும் மத்திய அரசின் திட்டத்தை ஆப்ரேஷன் ‘சக்சஸ்’ பேசண்ட ‘டைஸ்’ என தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
Samayam Tamil dmk treasurer m k stalin blames central governments decision regarding black money
ஆப்ரேஷன் ‘சக்சஸ்’ பேசண்ட் ‘டைஸ்’ : போட்டுத்தாக்கிய ஸ்டாலின்!


மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில், போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் டாக்டர் சரவணனை ஆதரித்து மதுரையில் தி.மு.க., பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் வங்கிகளுக்கு பணம் மாற்றவரும் மக்களின் விரலில் இன்று முதல் ’மை’ வைக்கப்படும் என்ற அறிவிப்பு குறித்து ஸ்டாலிடம் கேட்ட போது, இது மக்களை அவமதிக்கும் செயல் என்று கடுமையாக விமர்சித்தார்.

இதுகுறித்து ஸ்டாலின் கூறியது:
பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்றும் விஷயத்தில் மக்கள் சந்தித்துவரும் சிரமங்களை சரிசெய்ய மத்திய அரசுநடவடிக்கை எடுக்கவேண்டும். தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் காலை முதல் இரவு வரை வங்கிகளின் முன்பு, நீண்ட வரிசையில் காத்திருப்பது வேதனை அளிக்கிறது. கருப்பு பணத்தை ஒழிப்பது நல்ல விஷயம் என்றாலும் அதை நடைமுறைப்படுத்திய முறை வேதனை அளிக்கிறது. வங்கிக்கு வரும் மக்களின் விரல்களில் இன்று முதல் மை வைக்கப்படும் என்ற அறிவிப்பு, ஓட்டுப்போட்ட மக்களை அவமதிக்கும் செயலாகும். சுருக்கமாக செல்லவேண்டும் என்றால் பிரதமர் மோடியின் இந்த திட்டம் ஆப்ரேஷன் ‘சக்சஸ்’ பேசண்ட் ‘டைஸ்’.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அடுத்த செய்தி