ஆப்நகரம்

தைரியத்தின் அடையாளத்தை இழந்தோம் - ஸ்டாலின்

தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானதாக அவர் கடந்த 2 மாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வாமாக அறிவித்தது.

TNN 6 Dec 2016, 7:53 am
தமிழகத்தின் முதல்வராக இருந்த ஜெயலலிதா திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு காலமானதாக அவர் கடந்த 2 மாத காலமாக சிகிச்சை பெற்றுவந்த அப்பல்லோ மருத்துவமனை அதிகாரப்பூர்வாமாக அறிவித்தது.
Samayam Tamil dmk treasurer mk stalin about demise of cm selvi jayalalithaa
தைரியத்தின் அடையாளத்தை இழந்தோம் - ஸ்டாலின்


இதனையடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அவரது இல்லமான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. ஜெயலலிதாவின் உடலுக்கு போயஸ் கார்டனில் அவரது குடும்ப வழக்கப்படி இறுதிச் சடங்கள் நடைபெற உள்ளது.

ஜெயலலிதா குறித்து எதிர் கட்சி தலைவரான மு.க. ஸ்டாலின் பேசுகையில், “எதிர்கட்சியினராக இருந்தாலும் ஒரு தைரியமான தலைவரான ஜெயலலிதாவின் இழப்பு ஒரு சீர்படுத்த முடியாத இழப்பு தான்.

முதல்வராக 2016ல் ஜெயலலிதா பொறுப்பேற்ற போது, எனக்கு முன் வரிசையில் இடமளிக்கப்பட வில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதைதொடர்ந்து, அடுத்த சில மணி நேரத்தில், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இடமளிக்காதது குறித்து வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன் என அறிவித்தார்.

ஜெயலலிதா, எங்கள் கட்சி கொள்கையிலிருந்து வேறுபட்டிருந்தாலும், தமிழர்கள் உணர்வையும், தமிழர்களுக்கான உரிமைகள் பெறுவதில் ஒரு போராளியாகவே செயல்பட்டார். தமிழர்களுக்கு ஒரு ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பு.

ஜெயலலிதாவின் இழப்பிற்கு நான் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறினார்.

அடுத்த செய்தி