ஆப்நகரம்

சாராய ஆலை அதிபரை வேட்பாளராக நிறுத்திய திமுக: முதல்வர் பழனிசாமி சாடல்!

வசதி படைத்தவர்களும், சாராய ஆலை அதிபர்களும் தான் திமுகவில் வேட்பாளர்களாக போட்டியிட முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.

Samayam Tamil 25 Mar 2019, 10:52 am
வசதி படைத்தவர்களும், சாராய ஆலை அதிபர்களும் தான் திமுகவில் வேட்பாளர்களாக போட்டியிட முடியும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியுள்ளார்.
Samayam Tamil சாராய ஆலை அதிபரை வேட்பாளராக நிறுத்திய திமுக: முதல்வர் பழனிசாமி சாடல்!
சாராய ஆலை அதிபரை வேட்பாளராக நிறுத்திய திமுக: முதல்வர் பழனிசாமி சாடல்!


வேலூர் மாவட்டம்,அரக்கோணத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியின் பாமக வேட்பாளர் ஏகே மூர்த்தியை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில்; இந்த தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மூர்த்தி எளிமையானவர். சாதாரண மக்களும் எளிதில் அனுக கூடியவர். ஆனால் திமுகவில் இவரை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர் சாராய ஆலை அதிபர். பல ஆலைகளுக்கும் கம்பெனிகளுக்கும் சொந்தக்காரர், பணக்காரர். திமுக இதுபோன்று பணக்காரர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பளித்துள்ளது.

எங்கள் அதிமுக கூட்டணியில் போட்டியிடுபவர்கள் எல்லாம் சாதாரண சாமானிய மக்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். ஒரு சில ஊடகங்கள் மட்டுமே உண்மையான செய்திகளை வெளியிடுகிறார்கள். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஒன்றுமில்லை. ஆனால் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அத்தனை அம்சங்களும் மக்களுக்கு நன்மை பயக்கும் வகையிலேயே உள்ளது என்று பேசினார்.

இதில் அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, புரட்சி பாரதம், புதிய தமிழகம் ஆகிய கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அடுத்த செய்தி