ஆப்நகரம்

200 அல்ல, 234 தொகுதிகளிலும் திமுக தான்; ஸ்கெட்ச் போடும் ஸ்டாலின்!

வரும் சட்டமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் திமுகவே வெல்லும் நிலை இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 17 Jan 2021, 3:32 pm
தேமுதிகவை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இன்று இணைந்தனர். இந்த விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இன்னும் நான்கு மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இதற்காக நாங்கள் காத்திருப்பதை விட, ஒட்டுமொத்த தமிழ்நாடும் தான் அதிகம் காத்திருக்கிறது. ஏனெனில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர். தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்று வரும் அதிமுக ஆட்சியால் மாநிலமே குட்டிச்சுவராகி விட்டது. ஆனால் அதையெல்லாம் மறந்துவிட்டு பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
Samayam Tamil MK Stalin


விளம்பரங்களுக்காகவே 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். எதையோ சாதித்துவிட்டதாக ஊடகங்கள், தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் இப்படியெல்லாம் செய்ய முடியாது. எனவே தான் முன்கூட்டியே மக்களை மயக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். இது மக்களின் வரிப்பணம் இல்லையா? இதனை மக்கள் நலத்திட்டங்களுக்காக தானே பயன்படுத்த வேண்டும்.

என்னது பாடத்திட்டம் பாதி படிச்சா போதுமா? தமிழக மாணவர்களுக்கு சூப்பர் நியூஸ்!
நீங்கள் என்ன தான் பிரச்சாரம் செய்தாலும் தமிழகத்தில் ஆட்சிக்கு அல்ல. எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாது. சமீபத்தில் நான் பேசுகையில் வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் 200 இடங்களுக்கு மேல் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று கூறியிருந்தேன். ஆனால் மக்களின் மனநிலையை பார்க்கும் போது 234 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை வருகிறது.

இந்த சூழலில் நீங்கள் எல்லாம் தேமுதிகவில் இருந்து திமுகவில் இணைந்துள்ளனர். நீங்கள் மட்டுமின்றி, அவர்களது உறவினர்கள், நண்பர்கள், சுற்றத்தார் என அத்தனைபேரும் இந்த ஆட்சியின் அக்கிரமங்களை சுட்டிக் காட்ட வேண்டும். திமுக ஆட்சிக்கு வருவதற்கான பணிகளைச் செய்ய்யுங்கள்.

மாஸ்டர் ஆடியோ லான்ச்சில் விஜய் சேதுபதி சொன்னது மாதிரியே நடந்துடுச்சே
திமுக ஆட்சியில் தமிழக மக்களுக்கு பல்வேறு நன்மைகள் செய்திருக்கிறோம். அத்தகைய சேவைகள் மீண்டும் தொடரும். விவசாயிகள் கடனை ரத்து செய்வோம். பாகுபாடின்றி முதியவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும். அனைவரும் திமுகவிற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.

அடுத்த செய்தி