ஆப்நகரம்

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் என்பது உள்நோக்கம் உடையது - ஜி.கே.வாசன்

சபாநாயகர் தனபால் முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து விரைவில் விசாரிக்க வலியுறுத்தினார். இதனையடுத்து சபாநாயகர்மீது மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்தியது.

Samayam Tamil 1 May 2019, 7:43 pm
சபாநாயகர் தனபால் முன்னதாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து விரைவில் விசாரிக்க வலியுறுத்தினார். இதனையடுத்து சபாநாயகர்மீது மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர திமுக வலியுறுத்தியது.
Samayam Tamil g.k.vasan.

இதனையடுத்து தற்போது சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவர முயற்சிப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னையில் த.மா.கா தொழிற்சங்க பேரவை சார்பில் நடைபெற்ற மே தினவிழாவில் ஜி.கே.வாசன் பங்கேற்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 எம்எல்ஏக்கள் மீது அதிமுக கொறடா கொடுத்த புகாரின்பேரில் சபாநாயகர் தனது அதிகாரத்தைக் கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உரிமை அவருக்கு உண்டு எனவும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி