ஆப்நகரம்

இந்திரனுக்கு யாகம் பண்ணுங்க... டெல்லி மாசு சரி ஆகிடும்: உ.பி. அமைச்சர் ஐடியா

மாசுபாட்டை குறைக்க டெல்லி அரசாங்கத்தை வேறு ஒரு யோசனை தருகிறார் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஒருவர்.

Samayam Tamil 4 Nov 2019, 8:59 am
இந்திய நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் காற்று மாசுபாட்டின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து மோசமாகி வருகிறது. காற்று மாசுபாட்டை குறைக்க அறிவியல் ரீதியாக ஆய்வுகளும், அண்டை மாநிலங்களின் மாசுபடுத்தும் காரணிகளைக் குறைக்கவும் டெல்லி அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil do indra pooja bjp minister says idea for reducing air pollution
இந்திரனுக்கு யாகம் பண்ணுங்க... டெல்லி மாசு சரி ஆகிடும்: உ.பி. அமைச்சர் ஐடியா


இந்நிலையில், மாசுபாட்டை குறைக்க வேறு ஒரு யோசனை தருகிறார் உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் ஒருவர்.

அயோத்தி வழக்கு தீர்ப்பு முன்னேற்பாடுகள்: அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு தீவிரம்

அதென்ன யோசனை:
இந்திர பகவானுக்கு ஒரு யாகம் நடத்துங்கள். காற்று மாசுபாடு சரியாகி விடும் என அந்த பாஜக அமைச்சர் யோசனை கூறி உள்ளார். இதுதான் உத்தரப் பிரதேச மாநிலத்தின் தொழிலாளர் நல வாரிய அமைச்சர் சனில் பராலா கூறியுள்ள யோசனை.



அவர் தெரிவித்ததாவது, “மாசுபாடு குறித்து மீண்டும் மீண்டும் புதுடெல்லி அரசு விமர்சிப்பது துரதிருஷ்ட வசமானது. எல்லோருக்கும் தெரியும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள கரும்புக் கழிவுகளை எரிப்பது இயற்கையானது. இதனை தவறு என்று கூறுவது ஒரு வகையில் விவசாயிகளின் மீதான தாக்குதலாகும்.

இதற்கு தீர்வாக ஒன்றே ஒன்றுதான் சொல்ல வேண்டும். இந்திர பகவானைனை பிரார்த்தனை செய்வது மாசுபாட்டை எதிர்த்து போராட உதவும். இந்திரனை மகிழ்விக்க அரசாங்கங்கள் இந்திரனை நோக்கி யாகத்தை நடத்த வேண்டும். இது பல் ஆண்டுகளாக பாரம்பரியமாக செய்யப்பட்டு உள்ளது. மழைக் கடவுளான இந்திரன் பிரச்சனைகளை சரியாக அமைப்பார் என்றும் தெரிவித்தார்.

அடுத்த செய்தி