ஆப்நகரம்

கைதான இடத்தில் உடனே பேனர் வைத்த ஸ்டாலின்

தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வை முழுமைத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் உடனே பேனர் வைக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Jan 2018, 11:54 am
சென்னை: தமிழக அரசின் பேருந்துக் கட்டண உயர்வை முழுமைத் திரும்பப்பெற வலியுறுத்தி நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் கைது செய்யப்பட்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தில் உடனே பேனர் வைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil does mk stalin welcome banner culture
கைதான இடத்தில் உடனே பேனர் வைத்த ஸ்டாலின்


தமிழகம் முழுவதும் ஜனவரி 20ஆம் தேதி முதல் பேருந்துக் கட்டண உயர்வு அமலானது. அரசியல் கட்சியினர், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பின் எதிர்ப்புக்குப் பின் பேருந்துக் கட்டணத்தில் சிறிதளவு குறைப்பை தமிழக அசு அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தக் கட்டணக் குறைப்பு அமலாகியுள்ளது. இந்த கட்டணக் குறைப்பால் தமிழக போக்குவரத்துக் கழகத்துக்கு 4 கோடி ரூபாய் நஷ்டம் தினசரி ஏற்படும் என்றும் அரசு தெரிவிக்கிறது.

இந்நிலையில், தமிழக அரசின் கட்டணக் குறைப்பு பெயரளவில் செய்யப்பட்டிருக்கிறது என்பதை பலரும் சுட்டிக்காட்டி விமர்சிக்கின்றனர். கட்டண உயர்வை முழுமையாகத் திரும்பப்பெற வலியுறுத்தி இன்று சென்னை கொளத்தூரில் அத்தொகுதி எம்எல்ஏ ஆன திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், திராவிடர் கழகம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் பங்கேற்றன.



சாலையில் சுமார் 6 அரசுப் பேருந்துகளை மறித்து அதன் மீது ஏறி நின்று திமுகவினர் முழக்கமிட்டனர். மு.க.ஸ்டாலின், பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்ட தலைவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களை அனைவரும் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மண்டபத்திற்கு வந்த கையோடு ஒரு பேனர் தயாரித்து மேடையில் வைத்து அதன் முன்பு ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் அமர்ந்துள்ளனர்.

அடுத்த செய்தி