ஆப்நகரம்

மோடி-கருணாநிதி சந்திப்பு மரியாதையானது; அதப்போயா இப்படி சொல்றீங்க; கொதிக்கும் கனிமொழி!

கருணாநிதி உடனான பிரதமரின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

TNN 8 Nov 2017, 5:36 pm
சென்னை: கருணாநிதி உடனான பிரதமரின் சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dont dishonor modi karunanidhi meet says kanimozhi
மோடி-கருணாநிதி சந்திப்பு மரியாதையானது; அதப்போயா இப்படி சொல்றீங்க; கொதிக்கும் கனிமொழி!


பணமதிப்பிழப்பு அமலாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, அதனை கருப்பு தினமாக எதிர்க்கட்சிகள் அனுசரித்து வருகின்றன. அதில் கோவையில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலங்களவை திமுக எம்.பி கனிமொழி தலைமை வகித்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், கருப்பு பணத்தை ஒழிக்க கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் இருந்து மக்கள் மீளவில்லை. ஓராண்டாகியும் இதே நிலை நீடிக்கிறது. அதேசமயம் லஞ்சம், ஊழல் குறைந்தபாடில்லை.

2ஜி தீர்ப்பு வரும் நேரத்தில் பிரதமர், கருணாநிதியை சந்தித்தாரே என்று நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு, மூத்த தலைவர் என்ற முறையில் பிரதமர் மோடி கருணாநிதியை சந்தித்துள்ளார்.

இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. ஆனால் அதை இப்படி கொச்சைப்படுத்தி கூற வேண்டாம் என்று குறிப்பிட்டார். தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை அதிகமாகி விட்டதாக கூறுவது, அப்பட்டமான பொய் என்று கனிமொழி கூறினார்.

Dont dishonor Modi-Karunanidhi meet says Kanimozhi.

அடுத்த செய்தி