ஆப்நகரம்

மழைக் குறித்து மக்களிடையே பீதியை பரப்பாதீங்க.!

மழை குறித்து, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம், என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

TNN 6 Nov 2017, 2:32 pm
மழை குறித்து, மக்களிடம் பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம், என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil dont publish unauthenticated news about rain balachandiran
மழைக் குறித்து மக்களிடையே பீதியை பரப்பாதீங்க.!


கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி பின்வருமாறு;
வட கிழக்கு பருவமழை, தமிழகத்தின் முக்கிய காலமாகும். 27ம் தேதி முதல், கடலோர மாவட்டங்களில், வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. வளி மண்டலத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, சென்னையில் தொடர்ந்து மழை பெய்தது. கடலோர மாவட்டங்களில் இரு நாட்களுக்குள், மழை குறைய வாய்ப்புள்ளது.

கடலில் நில நடுக்கம் ஏற்பட்டால், சுனாமி போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என கணிக்க முடியும். தற்போது, கணிக்க முடியாது. வானிலை மையம், தொடர்ந்து மழை குறித்து சரியான தகவல்களை தெரிவித்து வருகிறது. சமூக வலைதளங்களில் ஒரு சிலர், 100 செ.மீ., வரை மழை பொழியும் என்பது போன்ற ஆதாரபூர்வமற்ற தகவல்களை பரப்புகின்றனர். இது போன்ற தகவல்களால், மக்கள் பீதியடைகின்றனர். பேரிடர் காலங்களில், மக்களுக்கு உதவும் வகையில், தகவல்களை பரப்பலாம். இதுபோன்று பீதியை ஏற்படுத்தும் தகவல்களை பரப்ப வேண்டாம்.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அடுத்த செய்தி