ஆப்நகரம்

ஜெயராமன் கருத்திற்குப் பதிலளித்து தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்

துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்திற்குப் பதிலளித்து தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.

TNN 14 Sep 2017, 3:23 pm
சென்னை: துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் கருத்திற்குப் பதிலளித்து தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிருபர்களிடம் தெரிவித்துள்ளார்.
Samayam Tamil dont want to lower my status
ஜெயராமன் கருத்திற்குப் பதிலளித்து தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின்


சென்னையில் இன்று நிருபர்களைச் சந்தித்த துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், ஸ்டாலின் போராட்டங்களைத் தூண்டிவிட்டு ஆட்சியைக் கலைக்க முயற்சிப்பதாகவும், முதல்வராக வேண்டும் எனும் ஸ்டாலினின் கனவு கனவாகவே இருக்கும் எனவும் கூறினார்.

மேலும், நீட் தேர்விற்கு எதிராக நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசைப் பற்றி தவறாக பேசியதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, ஸ்டாலினுக்கு மனம் பேதலித்து விட்டதாக குற்றம் சாட்டினார். இதனையடுத்து, நிருபர்களைச் சந்தித்த ஸ்டாலின் துணை சபாநாயகரின் கருத்திற்குப் பதிலளித்து தன்னைத் தரம் தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Don’t want to lower my status by answering to Pollachi Jayaraman’s comments says M.K.Stalin.

அடுத்த செய்தி