ஆப்நகரம்

கேப்டனுடன் கமல் சந்திப்பு: திராவிடம் வெல்லும் என சூளுரை

நடிகர் கமல்ஹாசன் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்.

Samayam Tamil 19 Feb 2018, 1:16 pm
நடிகர் கமல்ஹாசன் தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்.
Samayam Tamil dravidian politics will spell success in future too we will prove it kamal
கேப்டனுடன் கமல் சந்திப்பு: திராவிடம் வெல்லும் என சூளுரை


நடிகர் கமல் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் அவரைச் சந்தித்துப் பேசினார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசியபோது இருவரும் இது நட்பு ரீதியான சந்திப்பு என்றனர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மூத்தத் தலைவர் நல்லக்கண்ணு, திமுக தலைவர் கருணாநிதி போன்றவர்களையும் சந்தித்த அவர், தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தை இன்று சந்தித்துப் பேசினார்.

இந்தச் சந்திப்பிற்குப் பின் பேசிய கமல், “நீங்களெல்லாம் அரசியலுக்கு வர வேண்டும் என விஜயகாந்த் என்னை வாழ்த்தினார்” என்று தெரிவித்துள்ளார். எதிர்காலத்திலும் திராவிட அரசியலை பின்பற்றி வெற்றி பெற்றுக் கோட்டுவோம் என்று கூறியதாவும் அவர் கூறினார்.

அடுத்த செய்தி