ஆப்நகரம்

அரியலூர் வழியாக அதிகாலை பயணமா? வழிமறித்து நல்லது செய்யும் காவலர்கள் - எப்படி தெரியுமா!

திருச்சி: அதிகாலை சாலைப் பயணம் மேற்கொள்ளும் வாகன ஓட்டிகளுக்கு காவலர்கள் டீ கொடுத்து உற்சாகப்படுத்தி அனுப்பி வைக்கின்றனர்.

TIMESOFINDIA.COM 14 Jan 2019, 5:56 pm
அதிகாலை வேளைகளில் சாலைப் பயணம் மேற்கொள்வது சற்று சிரமமான காரியம். ஏனெனில் உறக்கம் கண்களைத் தழுவ, விபத்துகள் ஏற்பட வாய்ப்பாக அமைந்து விடுகிறது. இதனால் சூடான பானங்களை அருந்திச் செல்வது சற்று விழிப்புடன் வாகனத்தை இயக்க உதவும். இதுபோன்று சூடான பானங்களை காவலர்களே, வாகன ஓட்டிகளுக்கு அளித்து உதவும் சம்பவம் நடைபெற்று வருகிறது. எங்கு தெரியுமா? அரியலூர் பகுதியில்...
Samayam Tamil Ariyalur Police


கடந்த சில நாட்களுக்கு முன்பு, அரியலூர் காவல் மேற்பார்வையாளர் வி ஆர் ஸ்ரீனிவாசன், ஜெயங்கொண்டம் துணை மண்டலத்தில் இருக்கும் காவல் நிலையங்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கி உள்ளார். அதாவது, பொங்கல் பண்டிகையை ஒட்டி வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படும். எனவே பாதுகாப்பான பயணம் மேற்கொள்ள உரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அதன்படி, டி பாலூர் போலீசார் அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை அரியலூர் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்துகின்றனர். அவர்களுக்கு டீ உள்ளிட்ட சூடான பானங்களை அளித்து, பாதுகாப்போடு செல்லுமாறு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய டி பாலூர் காவல் நிலைய ஆய்வாளர் கே செல்வகுமாரி, இரவு நேரப் பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சூடான நீர் மற்றும் டீ உள்ளிட்டவற்றை நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் ஓட்டுநர்களுக்கு அளிக்க வேண்டும். பெரும்பாலும் பேருந்து மற்றும் டிரக் ஓட்டுநர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, சிறிது நேரம் பேசுகிறோம். பின்னர் சூடான பானங்கள் அளித்து வழி அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி