ஆப்நகரம்

ரயிலை தவறவிட்டதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வண்டியை நிறுத்திய குடிகாரர்!

ஏற்காடு எக்ஸ்பிரஸை தவறவிட்டதால், அடுத்த ஸ்டேஷனில் ஏறுவதற்காக வண்டியில் வெடிகுண்டு இருக்கிறது என தொலைபேசி வழி மிரட்டல் விடுத்த குடிகார நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

TNN 23 Jun 2017, 3:01 pm
சேலம் : ஏற்காடு எக்ஸ்பிரஸை தவறவிட்டதால், அடுத்த ஸ்டேஷனில் ஏறுவதற்காக வண்டியில் வெடிகுண்டு இருக்கிறது என தொலைபேசி வழி மிரட்டல் விடுத்த குடிகார நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Samayam Tamil drunk misses train makes bomb threat
ரயிலை தவறவிட்டதால் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து வண்டியை நிறுத்திய குடிகாரர்!


அசோக் குமார் (51) என்பவர் ஏற்காடு எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்காக ஈரோட்டில் ரயில் ஏற டிக்கெட் புக் செய்திருந்தார். ஆனால் அவர் குடித்துவிட்டு ரயில் வர தாமதமானதால் ரயிலை தவறவிட்டுவிட்டார். எனவே அடுத்த ஸ்டஷேனான சேலத்தில் ரயிலை பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ரயில்வே காவல்துறைக்கு போன் செய்து ரயிலின் எஸ் 10 பெட்டியில் பாம் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால் அலர்ட்டான ரயில்வே காவல்துறை ரயிலை பல்வேறு இடங்களில் நிறுத்தி சோதனை செய்தது. ரயில் சேலம் ஜங்ஷனை அடைந்ததும் எல்லா பெட்டியையும் காவல்துறை மற்றும் வெடிகுண்டு சோதனை பிரிவினர் சோதனையிட்டனர். இதனால் 55 நிமிடம் ரயில் தாமதமானது. தீவிர சோதனைக்கு பின் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது அசோக் குமார் என்பதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இதனையடுத்து அசோக் குமார் கைது செய்யப்பட்டார். அசோக் குமாரிடம் ரயில்வே காவல்துறை விசாரணை நடத்தியதில் பாரில் குடித்துக்கொண்டு இருந்ததால் நேரமாகிவிட்டது. அதனால் ரயிலை தவறவிட்டுவிட்டேன். அதனால் அடுத்த ரயில் நிலையத்தில் ரயிலை பிடிக்க மிரட்டல் விடுத்ததாக கூறியுள்ளார்.

அடுத்த செய்தி