ஆப்நகரம்

வறண்ட வானிலை தான்: எத்தனை நாள்களுக்கு தெரியுமா?

தமிழ்நாடு, புதுச்சேரியில் புதன் கிழமை வரை வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

Samayam Tamil 13 Feb 2021, 2:13 pm
பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 17 வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil Tamil Nadu weather


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை எங்கும் பதிவாகவில்லை.

சசிகலாவை ஏன் யாரும் பார்க்க வரவில்லை? பின்னணியில் உள்ள பகீர் தகவல்!

வறண்ட வானிலை நிலவும் என அறிவிக்கப்பட்டாலும் காலை நேரங்களில் பல இடங்களில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் மக்களை குளிர் வாட்டி எடுக்கிறது. புல்வெளிகளில் உறைபனி அதிகம் படர்ந்து கிடக்கின்றன. இதனால் பொதுமக்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

சசிகலா- ஜெ. கார் - அதிமுக கொடி: லிஃப்ட் கேட்டு அரசியல் செய்ய முடியுமா?

மீனவர்களுக்கான எச்சரிக்கை :
பிப்ரவரி 13ஆம் தேதி தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் மேற்கூறிய பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அடுத்த செய்தி