ஆப்நகரம்

பழவூர் நடராஜர் சிலை திருட்டு வழக்கு: சிலை திருட்டு தடுப்பு காவல் துறை டிஎஸ்பி காதர்பாட்சா கைது!

பழவூர் நடராஜர் சிலை திருட்டு வழக்கில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறை டிஎஸ்பி காதர்பாட்சா கைது செய்யப்பட்டுள்ளார்.

Samayam Tamil 22 Mar 2019, 3:25 pm
பழவூர் நடராஜர் சிலை திருட்டு வழக்கில் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறை டிஎஸ்பி காதர்பாட்சா கைது செய்யப்பட்டுள்ளார்.
Samayam Tamil police.


பழவூரிலுள்ள பழமையான சிவாலயத்தில் இருந்து ஆனந்த நடராஜர், ஆவுடையம்மன், காரைக்காலம்மையார், உள்ளிட்ட நான்கு ஐம்பொன் சிலைகள் கடந்த 2007ம் ஆண்டு கடத்தப்பட்டு வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளது. இச்சிலைகள் திருட்டு சம்பவத்தில் உண்மை குற்றவாளியை காப்பாற்றும் வகையில் சிலை திருட்டில் தொடர்பில்லாத மூவர் கைது செய்யப்பட்டனர். சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் இத்துறையில் இருந்து ஓய்வு பெற்றடிஎஸ்பி காதர்பாட்சா விற்கும் இச்சிலைகள் திருட்டிற்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஏற்கனவே அருப்புக்கோட்டை சிலை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணையில்இருந்த ஓய்வு பெற்ற டிஎஸ்பி காதர் பாட்ஷாவை சிலை திருட்டு தடுப்பு காவல் துறையினர் நேற்று சென்னையில் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காதர்பாட்சா இன்று காலை கும்பகோணத்தில் சிலை திருட்டு வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி