ஆப்நகரம்

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. அறிவிப்பு

திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தொடா்பான வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. தொிவித்துள்ளது.

Samayam Tamil 7 May 2018, 3:57 pm
திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா மரணம் தொடா்பான வழக்கை கைவிடுவதாக சி.பி.ஐ. தொிவித்துள்ளது.
Samayam Tamil Vishnu Priya


கடந்த 2015ம் ஆண்டு பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இந்த வழக்கை டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா விசாரித்து வந்தாா். இந்நிலையில் விஷ்ணு பிரியா அதே ஆண்டு டி.எஸ்.பி. அலுவலகத்தில் தூக்கில் தொங்கியவாறு மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதனைத் தொடா்ந்து கோகுல் ராஜ், விஷ்ணு பிரியா மரணம் தொடா்பான வழக்குகள் சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது.

ஆனால் விஷ்ணு பிரியாவின் தந்தை சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்று கோாிக்கை விடுத்தாா். அவரது கோாிக்கையை ஏற்று வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கோகுல் ராஜ் கொலை வழக்கில் விஷ்ணு பிரியாவுக்கு அழுத்தம் கொடுக்கப் பட்டதாகவும், அதன் விளைவாகத்தான் விஷ்ணு பிரியா மரணம் நடைபெற்றிருப்பதாகவும் தந்தை ரவி குற்றம் சாட்டினாா்.

இந்த வழக்கை சி.பி.ஐ. அதிகாாிகள் விசாரித்து வந்தனா். இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலை தான் செய்து கொண்டுள்ளாா் என்று சி.பி.ஐ. அதிகாாிகள் கோவை முதன்மை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனா். மேலும் இந்த வழக்கை கைவிடுவதாகவும் அவா்கள் தொிவித்துள்ளனா். இதனைத் தொடா்ந்து வழக்கு தொடா்ந்து ரவிக்கு இது தொடா்பாக சம்மன் அனுப்பப்பட்டு வருகிற 9ம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி