ஆப்நகரம்

விஷ்ணு பிரியா வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது.

TNN 23 Aug 2016, 3:29 pm
டிஎஸ்பி விஷ்ணு பிரியாவின் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளது.
Samayam Tamil dsp vishnupriya death hc transfers probe to cbi
விஷ்ணு பிரியா வழக்கு : உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு


சிபிசிஐடி விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. எந்த ஒரு காரணத்திற்காக இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்பதை சென்னை உயர்நீதிமன்றம் விளக்கவில்லை.

விஷ்ணு பிரியா இறப்பு குறித்து சிபிஐ விசாரண தான் வேண்டும் என விஷ்ணு பிரியா பெற்றோர்கள் கேட்டுக்கொண்டனர். ஏனெனில் தமிழக காவல்துறை உயர் அதிகாரியின் வழக்கு, தமிழகத்தின் காவலர்களால் விசாரிக்கப்பட்டால், விசாரணை சரியான பாதையில் செல்லாது என குறிப்பிட்டு இருந்தனர்.

இந்நிலையில், சிபிசிஐடி சார்பில் செய்யப்பட்ட விசாரணை முடிவு பெறும் நிலையில் உள்ளது இதனால் சிபிஐக்கு இந்த வழக்கை மாற்றக் கூடாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அடுத்த செய்தி