ஆப்நகரம்

25-ம் தேதி முதல் உடலில் அதிகமான வியர்வை வெளியேற வாய்ப்பு: வானிலை மையம்!

தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் உடலில் இருந்து அதிகமான வியர்வை வெளியேற வாய்ப்பு!

Samayam Tamil 22 Mar 2019, 1:04 pm
வானிலையில் நிலவி வரும் மாற்றத்தால், தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வரும் 25-ம் தேதி முதல் உடலில் இருந்து அதிகமான வியர்வை வெளியேற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil 25-ம் தேதி முதல் உடலில் அதிகமான வியர்வை வெளியேற வாய்ப்பு: வானிலை மையம்!
25-ம் தேதி முதல் உடலில் அதிகமான வியர்வை வெளியேற வாய்ப்பு: வானிலை மையம்!


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ந.புவியரசன் கூறியதாவது: தற்போது வானிலையில் ஏற்பட்டு வரும் மாற்றம் காரணமாக உள் மாவட்டங்களில் காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் காரணமாக வரும் 25-ம் தேதி முதல் சில தினங்களுக்கு, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், மக்களுக்கு உடலில் இருந்து வெளியேறும் வியர்வையின் அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இது உடல் சோர்வை ஏற்படுத்தும் என்பதால் போதிய அளவு நீரை அருந்த வேண்டும்.

சென்னையில் காலை வேளையில் வானம் ஓரளவு மேகமூட்டமாக இருக்கும். அதிகபட்சமாக 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை பதிவாக வாய்ப்பு உள்ளது.

நேற்று மாலை எடுக்கப்பட்ட வெப்பநிலை அளவின்படி, அதிகபட்சமாக சேலத்தில் 102 டிகிரி, கரூர் பரமத்தியில் 101 டிகிரி, மதுரை, திருச்சி, திருத்தணி ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

அடுத்த செய்தி