ஆப்நகரம்

மேட்டூரில் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு!

சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழையின் காரணமாக சீதாமலைத் தொடரில் மலைச்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டது.

TNN 26 Sep 2017, 10:46 am
சேலம்: சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பலத்த கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், மழையின் காரணமாக சீதாமலைத் தொடரில் மலைச்சரிவு ஏற்பட்டது. இதனால், போக்குவரத்து அங்கு பாதிக்கப்பட்டது.
Samayam Tamil due to rockslide in salem the transportation is affected on mettur road
மேட்டூரில் பாறைகள் சரிந்து போக்குவரத்து பாதிப்பு!


சேலம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக இடியுடன் கூடிய பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், சேலம் கேம்ப்பிலிருந்து காவிரி பாலம் வழியாக மேட்டூர் செல்லும் சாலையில் உள்ள சீதாமலைத் தொடரில் மலைச் சரிவு ஏற்பட்டது. அப்போது பெரிய பாறை ஒன்று சாலையில் சரிந்து விழுந்தது.

இதனால், அங்கு போக்குவரத்து 6 மணிநேரத்திற்கு பாதிப்படைந்தது. அதைத் தொடர்ந்து, வாகனங்கள் அனல்மின் நிலையம் நான்கு வழிச் சாலை வழியாக மேட்டூர் பாதைக்கு திருப்பி விடப்பட்டன. இது பொதுமக்களை பெரிதும் அவதிக்குள்ளாகியது.

Due to Rockslide in salem the transportation is affected on Mettur Road.

அடுத்த செய்தி