ஆப்நகரம்

பாரம்பரியம் மாறாது உயிரிழந்த மாடுகளுக்கு பூஜை செய்து, கதறி அழுத ஊர் மக்கள்!

மின்னல் தாக்கி உயிரிழந்த காளை மாடுகளுக்குப் பூஜை செய்து கதறி அழுத மக்கள். இந்த சம்பவம் பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்தது.

Samayam Tamil 20 Sep 2019, 5:08 pm
உயிர்களை உணர்வோடு பார்க்க வேண்டிய மனிதர்கள் உணர்விழுந்து இயந்திரமாய் சுற்றிதிரிகிறோம். இந்த சூழலில் உயிரிழந்த தங்கள் மாடுகளுக்கு அஞ்சலி செலுத்திய ஊர் மக்களின் உணர்வு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க செய்தது.
Samayam Tamil Untitled collage


தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் தொடர்ந்து 2 நாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. அதேபோல், ராமாநாதபுரம் மாவட்டத்திலும் நேற்று மழை கொட்டி தீர்த்தது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த வள்ளலந்தை ஊராட்சியில் காக்காகுளத்தில் மழை பெய்தபோது, தொடர்ந்து மின்னல் விழுந்ததை மக்கள் உணர்ந்தனர். மின்னல் தாக்கியதில் வீடுகள் ஏதும் சேதமடைந்துள்ளதா என்பதை சம்பந்தப்பட்ட ஊர் மக்கள் ஆய்வு செய்தனர். அப்போது, மின்னல் தாக்கியதில் கார்த்திகைசாமி என்ற விவசாயிக்கு சொந்தமான 2 காலை மாடுகள் அவை கட்டப்பட்டி வைக்கப்பட்டிருந்த கொட்டைகளிலே உயிரிழந்துக் கிடந்தது. அவற்றை பரிசோதித்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவத்தால் கார்த்திகைசாமி மனவேதனையடைந்தார்.

இறந்த மாடுகளை கார்த்திகைசாமி தனது விவசாயத்துக்கு உதவும் வகையில் வளர்த்து வந்தார். எனினும் அவற்றை வீட்டின் ஒரு பிள்ளையாகவே பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையில் காக்காகுளம் ஊர் மக்களிடையே சித்திரை மாதம் ஏறு பூட்டி விதைப்பு பணியை மேற்கொள்வது வழக்கம். இந்த நேரத்தில் ஊரில் உயிரிழக்கும் 2 மாடுகளை வைத்து பூஜை செய்துவிட்டு விதைப்பு பணிகளைத் தொடங்குவர்.

இந்நிலையில், மழை பெய்தபோது மின்னல் தாக்கியதில் உயிரிழந்த 2 மாடுகளை வைத்து பூஜை செய்தனர். கார்த்திகை சாமியின் காளை மாடு ஊர் மக்களுக்கு செல்லமாக வளர்ந்து வந்தது. இதனால், இறந்த மாடுகளை வைத்து பூஜை செய்தபோது கார்த்திகைசாமியின் குடும்பம் உட்பட ஊரே அழுது தீர்த்தது. இந்த சம்பவம் பார்ப்பவர்களை கண் கலங்கச் செய்தது. வீடியோவை உங்களால் அருகில் காண முடியும்.

அடுத்த செய்தி