ஆப்நகரம்

நான் ஏன் அரசியலுக்கு வந்தேன்? வைகோ மகன் சொன்ன பதில்!

நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்பட்டனர் என துரை வைகோ பேசியுள்ளார்.

Samayam Tamil 21 Oct 2021, 4:50 pm
மதிமுகவின் தலைமை கழகச் செயலாளராக வைகோவின் மகன் துரை வைகோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
Samayam Tamil vaiko son


இந்நிலையில் தான் அரசியலுக்கு வந்தது குறித்து துரை வைகோ பேசியுள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மதிமுக தொண்டர்கள் அழைப்பை நிராகரிக்க முடியவில்லை; அவர்கள் அழைத்ததால் வந்தேன். ரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்காத 2 பேரும் தம்பிக்கு வாக்களிக்கவில்லையே என வருத்தப்படும் வகையில் செயல்படுவேன். மேடை ஏறி பிரச்சாரம் செய்வேன் என கனவிலும் நினைத்ததில்லை; மதிமுக என்ற கழக்கத்தின் எதிர்காலத்திற்காக இதைச் செய்ய வேண்டிய நிர்பந்தம் எழுந்திருக்கிறது.
பள்ளிகள் திறக்கும் நேரத்தில் இப்படியொரு எச்சரிக்கை: இன்னும் 2 மாதம் தான்!
அரசியல் என்பது நச்சு நிறைந்த வாழ்க்கை என்பதுதான் என்னுடைய கருத்து. தொண்டர்களின் உணர்வுப்பூர்வமான பற்றைக் கண்டு, இயக்கத்தை விட்டுச் செல்ல மனமில்லாமல் கட்சிக்கு வந்திருக்கிறேன். தலைவர் வைகோ போன்ற சொல் ஆற்றல் செயல் ஆற்றல் எனக்கு இல்லாவிட்டாலும், முடிந்தவரை நன்றாக பணியாற்றுவேன். ரகசிய வாக்கெடுப்பில் தலைவர் வைகோ உறுதியாக இருந்தார். நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று தொண்டர்கள் ஆசைப்பட்டனர்.
மாணவர்களுக்கு கல்விக் கடன் ரத்து: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்!
மலைபோன்ற சுமை என் மீது விழுந்துள்ளது. நம்மில் உள்ள வேறுபாடுகளை தவிர்த்து கட்சிக்காக பாடுபட வேண்டும். அரசியலுக்கு வருவேன், பரப்புரை செய்வேன் என கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை” என தெரிவித்தார்.

அடுத்த செய்தி