ஆப்நகரம்

வேலூரில் நில அதிர்வு: அதிகாலை நிகழ்ந்த சம்பவம்!

வேலூர் அருகே இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

Samayam Tamil 29 Nov 2021, 7:33 am
கனமழை காரணமாக தமிழ்நாடு முழுவதும் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும், அடுத்தடுத்து உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாலும் தொடர்ந்து மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
Samayam Tamil vellore earthquake


மழை, வெள்ளம் ஒரு பக்கம் என்றால் நில அதிர்வு ஏற்பட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூரில் இருந்து மேற்கு - தென்மேற்கு திசையில் 59 கிலோ மீட்டர் தொலைவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
ரேஷன் பொருள்கள் இனி கட்? தமிழக அரசு எடுக்கும் அபாய முடிவு!
அதிகாலை 4.17 மணிக்கு 3.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதாக தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. நில அதிர்வால் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என்று ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
மாணவர்களுக்கு இப்படியொரு சர்ப்ரைஸ்: வெளியான அறிவிப்பு!
ஏற்கெனவே பருவமழை காலம், பேரிடர் காலம் போல் மாறியுள்ள நிலையில் இந்த நில அதிர்வு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி