ஆப்நகரம்

இன்னும் 2 நாட்களுக்கு குளுகுளு காற்று வீசும்: வானிலை மையம் தகவல்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சற்று குளுமையாக இருந்ததாகவும், இன்னும் ஒரு சில தினங்களுக்கு இதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 1 May 2017, 11:59 am
சென்னை: கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சற்று குளுமையாக இருந்ததாகவும், இன்னும் ஒரு சில தினங்களுக்கு இதமான வானிலை நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil easterly southeasterly winds keep city cool
இன்னும் 2 நாட்களுக்கு குளுகுளு காற்று வீசும்: வானிலை மையம் தகவல்


அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரிவெயில் வருகிற 4-ந்தேதி தொடங்க இருப்பதையொட்டி, தமிழகத்தில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தாலும் அனல்காற்று வீசுவது தொடர்கிறது. ஒவ்வொரு ஆண்டும் கோடை தொடங்கிய உடன் வெப்பத்தின் தாக்கத்தை சற்று தணிக்கும் வகையில் கோடைமழை பெய்வது வழக்கம்.

இந்நிலையில், தெற்கு மற்றும் தென்கிழக்கு திசையில் வீசும் இதமான காற்றுடன் கடல் காற்று வீசுவதனால் நகரம் குளிர்ச்சியாக இருக்கும். ஆனால், மே மாத கடைசி இரண்டு வாரங்களில் வெப்பநிலை பெரும்பாலும் 40 ° செல்சியஸ் வரை உயரும், வளிமண்டலத்தில் இருந்து மேற்கு திசையில் உலர்ந்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் உள் மாவட்டத்தில் ஒர் இரு இடங்களில் வெப்ப சலனம் காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்வதற்க்கு வாய்ப்பு உள்ளது. கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என்று கூறியுள்ளது. மேலும், சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The city has been cooler this April than in previous years. This compari-tively pleasant weather is likely to prevail for a few days, the Met office said.

அடுத்த செய்தி