ஆப்நகரம்

6 மணிக்குள் வெளியேறி விடுங்கள்... வெளியூர் தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

வெளியூர் வாசிகள் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Oct 2019, 2:00 pm
தமிழகத்தில் காலியாக அறிவிக்கப்பட்டிருந்த நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் எதிர்வரும் அக்டோபர் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தல் வெற்றிக்காக அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளின் தலைவர்களும் தங்கள் நேரடிகண்காணிப்பில் தேர்த வேலைகளை கவனித்து வருகின்றனர்.
Samayam Tamil ec asked other city partymen to get out of election constituencies
6 மணிக்குள் வெளியேறி விடுங்கள்... வெளியூர் தொண்டர்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு


தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. குறிப்பிட்ட தொகுதிக்குள் வாக்கு இல்லாத வெளியூர் தொண்டர்கள் மூலம் கட்சிகள் தேர்தல் வேலைகளை கவனித்து வந்தன. இந்நிலையில் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது.

இதனால், வெளியூர் வாசிகள் நாளை மாலை 6 மணிக்குள் தொகுதியிலிருந்து வெளியேறிவிட வேண்டும் என்று தமிழக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொகுதியில் வாக்குரிமை பெற்ற உள்ளூர் வாசிகள் மற்றும் போட்டியிடும் வேட்பாளர் ஆகியோர் தொகுதியிலேயே தங்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரும்பத் தகாத குழப்பங்களை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடக்கும் பட்சத்தில் இந்த நடவடிக்கைக்கையை இவ்வளவு கண்டிப்புடன் அமல்படுத்தப்பட வேண்டியதில்லை. ஆனால், இடைத்தேர்தலாக இருப்பதால் தேர்தல் ஆணையம் பொது அமைதியை உறுதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

அடுத்த செய்தி