ஆப்நகரம்

இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா அணியினரிடம் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது.

TNN 22 Mar 2017, 10:56 am
டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ், சசிகலா அணியினரிடம் தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது.
Samayam Tamil ec hearing begins in fight for aiadmk symbol
இரட்டை இலை சின்னம் யாருக்கு? தேர்தல் ஆணையத்தில் விசாரணை தொடங்கியது


ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதில் சசிகலா தரப்பில் டிடிவி. தினகரனும், ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனனும் போட்டியிடுகிறார்கள். இருதரப்பினரும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து இன்று டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி தலைமையில் விசாரணை நடைபெறுகிறது.

ஓ.பன்னீர்செல்வம் சார்பில் வழக்கறிஞர்கள் வைத்தியநாதன், குருகிருஷ்ண குமார் வாதத்தை முன்வைத்து வருகின்றனர். அதேபோல் சசிகலா சார்பில் வழக்கறிஞர்கள் மோகன் பராசரன், சல்மான் குர்ஷித் ஆகியோர் வாதம் செய்து வருகின்றனர். மேலும் இருதரப்பை சேர்ந்த மைத்ரேயன், மனோஜ் பாண்டியன், தம்பிதுரை உள்ளிட்டோர் தேர்தல் ஆணையம் வந்துள்ளனர். இதற்கிடையில் சசிகலா அணியின் கோரிக்கையை ஏற்று, பிற்பகல் வரை விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

EC hearing begins in Fight for AIADMK symbol.

அடுத்த செய்தி