ஆப்நகரம்

மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலைபோல் சித்தரித்து பரப்புரை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

TNN 31 Mar 2017, 10:10 pm
சென்னை : மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலைபோல் சித்தரித்து பரப்புரை செய்வதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் பதிலளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil ec notice to madhusudanan
மதுசூதனனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்



ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மின்கம்பம் சின்னத்தை இரட்டை இலை போல சித்தரித்து மக்களை ஏமாற்றப் பார்க்கிறார்கள் என்று அதிமுக அம்மா கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்தில் கடந்த திங்கள்கிழமை புகார் அளித்தார்.

இந்த புகார் மனுவை ஏற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் இது தொடர்பாக அதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சி வேட்பாளர் மதுசூதனன் வரும் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

EC notice to madhusudanan

அடுத்த செய்தி